அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மகா தீபம்: சிறப்பு பூஜைக்குப் பின் மலைக்குக் கொண்டு செல்லப்பட்ட மண்சட்டிகள்

சிறப்பு பூஜைக்குப் பின் மலைக்குக் கொண்டு செல்லப்பட்ட மண்சட்டிகள் குறித்து...

Earthen pots carried up the hill following special rituals

சிறப்பு பூஜை செய்யப்பட்ட மண்சட்டிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மலை மேல் கொண்டு செல்லப்பட்டன - DNS

Updated On :

​மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்காக, தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மண்சட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

​திருப்பரங்குன்றம் மலை உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, தீபம் ஏற்றுவதற்காகத் தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மண்சட்டிகள் தயார் செய்யப்பட்டன.

முன்னதாக, கோயில் அலுவலகத்தில் இந்த மண்சட்டிகள் மற்றும் தீபம் ஏற்றத் தேவையான கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

​தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்ட மண்சட்டிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மலை மேல் கொண்டு செல்லப்பட்டன.

​மலை மேல் உள்ள தீபத்தூணில் பாதுகாப்பாகத் தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக, அங்கு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பச்சைக் களிமண் பூசப்பட்டு, அதன் மீது இந்த மண்சட்டிகளை நிலைநிறுத்தி, நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகா தீபம் ஏற்றும் வைபவத்தைக் காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் சனிக்கிழமை காலை முதலே திருப்பரங்குன்றத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.

'Maha Deepam'on a stone pillar atop the Thiruparankundram hill: Earthen pots carried up the hill following special rituals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.