திருப்பரங்குன்றம்: மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் தீபம் ஏற்றும் பணிக்கு பாதுகாப்பு அளிக்க வருகை தந்துள்ள மத்திய ரிசர்வ் காவல் படையினரை மேளதாளம் முழங்க மலர் தூவி வரவேற்றது குறித்து...

சிஆர்பிஎஃப் வீரர்களை மேளதாளங்களுடன் மலர் தூவி வரவேற்ற கிராம பொதுமக்கள். - டிஎன்எஸ்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் தீபம் ஏற்றும் பணிக்கு பாதுகாப்பு அளிக்க வருகை தந்துள்ள மத்திய ரிசர்வ் காவல் படையினரை (சிஆர்பிஎஃப்), அந்த பகுதி மக்கள் மேளதாளம் முழங்க மலர் தூவி வரவேற்றனர்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த 21-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல், 24-ஆம் தேதி நடைபெற்ற தீபத் திருவிழாவின்போது, வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மலை முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டதோடு, இதனைக் கண்காணிக்க உயர்நீதிமன்ற முன்னாள் இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழுவையும் நியமித்தார்.
இந்த நிலையில், சனிக்கிழமை பாதுகாப்புப் பணிக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினர் திருப்பரங்குன்றம் வருகை தந்துள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக, பூத்தட்டுகள் மற்றும் மேளதாளங்களுடன் தயார் நிலையில் இருந்த திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோயில் தெரு பகுதி மக்கள், அவர்களை மலர் தூவி வரவேற்றனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "எங்களது நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பாதுகாப்புப் பணிக்காக வரவுள்ள மத்திய காவல் படையினரை மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்க காத்திருப்பதாக" தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை தீபம் சனிக்கிழமை மாலை ஏற்றப்பட உள்ள நிலையில், காலையிலிருந்து பக்தர்கள் மலை மேல் செல்ல தொடங்கியுள்ளனர். அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான தற்காலிக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, மலை மீதுள்ள தூணை சுற்றிலும் கம்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்ற பாதுகாப்பு அளிக்க வந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மேளதாளங்களுடன் மலர் தூவி வரவேற்பு அளித்த கிராம பொதுமக்கள்.
Thiruparankundram: Villagers give an enthusiastic welcome to central security forces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


