அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது ஏன்? திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம்

நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆகம விதிகளின்படி மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

Tirupparankundram temple

திருப்பரங்குன்ற மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் - படம் | ஏஎன்ஐ

Updated On :

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது ஏன்? என்பது குறித்து சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆகம விதிகளின்படி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தின் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்ற மலை உச்சியில் வழக்கமான இடத்தில் இன்று (நவ. 24) மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலையின் மீதுள்ள தூண் மீது தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, இந்த ஆண்டு மலை உச்சியில் எங்கு தீபம் ஏற்றப்படும் எனப் பொதுமக்களும், பக்தர்களும், இந்து அமைப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேல் பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தூணுக்கு பதிலாக பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மீது தீபம் ஏற்றியது தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்துள்ள விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச்சடங்குகள் மற்றம் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது.

இத்தகைய நீண்ட காலத்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices) சமய மரபுகள் மற்றும் சடங்குகள் (Custom and Rituals) ஆகம விதிகள் (Agama rules) ஆகியவை திருக்கோயிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

எனவே, நமது திருக்கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும், அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், இந்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி இத்திருக்கோயில் திருக்கார்த்திகை மகாதீபமானது இத்திருக்கோயில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று 24.11.2026 6 மணியளவில் ஏற்றப்பட்டது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

Summary

Why was the court order not followed Tirupparankundram temple administration provides an explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.