பவர்பிளேவில் 118 ரன்கள் குவிப்பு..! சாதனை படைத்த இந்திய அணி!
இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவில் நிகழ்த்திய சாதனை குறித்து...
அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி - படம்: பிசிசிஐ
இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் குவித்தது.
மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது.
இதில் டேரில் மிட்செல் 52 பந்துகளில் 5 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 89* ரன்கள் குவித்தார். பெவோன் ஜேக்கப்ஸ் 4 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
அடுத்து பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 7.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார்கள். இதில் 15 பந்துகளில் அபிஷேக் அரைசதமடித்து அசத்தினார்.
பவர்பிளே முடிவில் (6 ஓவர்களில்) இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் குவித்தது. முழு நேர கிரிக்கெட் அணிகளில் இதுதான் அதிகபட்ச பவர்பிளே ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
1â£1â£8⣠in 6 overs ð¤¯#TeamIndia's Highest powerplay score in Men's T20Is â¼ï¸
— BCCI (@BCCI) October 27, 2026
What a show by the openers ð¿
Updates â¶ï¸ https://t.co/zf4CnZQ8CD#NZvIND pic.twitter.com/GnxpmRFqzX
Summary
Highest score ever in t20i history in full member nations Team india record
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


