
சர்வதேச கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் புதிய சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கே.எல்.ராகுல் - படம் | பிசிசிஐ
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நியூ சண்டீகரில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 87 பந்துகளில் 129 ரன்கள் (10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
1ï¸â£0ï¸â£,0ï¸â£0ï¸â£0ï¸â£ of the most ððð®ððð ð¿ðð»ðð«¡#TeamIndia vice-captain KL Rahul reaches a magnificent milestone in international cricket ðð
— BCCI (@BCCI) October 3, 2026
Updates â¶ï¸ https://t.co/PhSJSbvW7C#INDvWI | @mflone_ | @klrahul pic.twitter.com/YfGWdgCXBj
இன்றையப் போட்டியில் 129 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 4288 ரன்கள் எடுத்துள்ளார். 101 ஒருநாள் போட்டிகளில் 3541 ரன்களும், 72 டி20 போட்டிகளில் 2265 ரன்களும் எடுத்துள்ளார்.
Summary
Indian cricketer K.L. Rahul has set a new record in international cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






