திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி அசத்தல்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

Abhishek Sharma - Vaibhav Suryavanshi

அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Updated On :

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து அசத்தியது. வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் மழையைப் பொழிந்த அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 118 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி வெறும் 2.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. சர்வதேச டி20 போட்டி ஒன்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட 50 ரன்கள் இதுவாகும்.

டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது. 5 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்கள் எடுத்தது.

டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி பார்ட்னர்ஷிப் அமைத்து அதிவேகமாக 100 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். மேலும், டி20 போட்டியில் அதிக எகானமியில் (18.13) 100 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையையும் இந்த இணை படைத்தது.

Summary

The Indian team has achieved several milestones following their resounding victory in the third T20 match against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER