தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

3-வது டி20: அபிஷேக் சர்மா அதிரடி; மேற்கிந்தியத் தீவுகளுக்கு 224 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

Abhishek Sharma

அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ

Published On :

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இந்தூரில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

அபிஷேக் சர்மா அதிரடி; மேற்கிந்தியத் தீவுகளுக்கு 224 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 223 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 37 ரன்கள், திலக் வர்மா 28 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 21 ரன்கள், அக்‌ஷர் படேல் 20 ரன்கள் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ், ஷமர் ஜோசப் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கீமோ பால் மற்றும் குடகேஷ் மோட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the third T20 match against the West Indies, the Indian team scored 223 runs before being bowled out.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.