2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சாய் ஹோப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அரைசதம்; இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Captain Shai Hope smashes the ball to the boundary.

பந்தை பவுண்டரிக்கு விளாசும் கேப்டன் சாய் ஹோப் - படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி லக்னௌவில் இன்று (அக்டோபர் 6) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

சாய் ஹோப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அரைசதம்!

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அகீல் ஹொசைன் 15 ரன்கள், கமில் பூரான் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இந்தியா தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய நமன் திர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Summary

In the first T20 match against India, West Indies were bowled out for 171 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.