இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலிருந்து கேமரூன் கிரீன் விலகல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார்.

Cameron Green

கேமரூன் கிரீன் - படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட்டிலிருந்து ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது, கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அடிவயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகுவதை தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் விளையாட மாட்டார். அவர் காயத்திலிருந்து நன்றாக குணமடைந்து வருகிறார். இந்தத் தொடரின் பிற்பகுதியில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என நம்புகிறோம் என்றார்.

Summary

Australian all-rounder Cameron Green has withdrawn from the first Test match against South Africa due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER