
கடைசி ஒருநாள்: கே.எல்.ராகுல் சதம் விளாசல்; மே.இ.தீவுகளுக்கு 352 ரன்கள் இலக்கு!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல் - படம் | பிசிசிஐ
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நியூ சண்டீகரில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
கே.எல்.ராகுல் சதம் விளாசல்!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 0 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து, ரோஹித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 85 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 69 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
ðð¹ð¶ð»ð¶ð°ð®ð¹. ðð¼ðºðºð®ð»ð±ð¶ð»ð´. ðð ð«¡
— BCCI (@BCCI) October 3, 2026
10,000 international runs and now his 9ï¸â£th ODI hundred ð
WHAT A KNOCK from the vice-captain ð
Updates â¶ï¸ https://t.co/PhSJSbvW7C#TeamIndia | #INDvWI | @mflone_ | @klrahul pic.twitter.com/0a8yiSKXKT
களமிறங்கியது முதலே கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதம் விளாசி அசத்தினார். அவர் 87 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். நமன் திர் 30 ரன்கள், அன்ஷுல் கம்போஜ் 17 ரன்கள் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கீமோ பால் இரண்டு விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்குகிறது.
Summary
Batting first in the third ODI against the West Indies, the Indian team scored 351 runs for the loss of 7 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






