
2-வது ஒருநாள்: குசல் மெண்டிஸ் சதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 322 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்துள்ளது.

சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் - படம் | AP
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து - இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
குசல் மெண்டிஸ் சதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 322 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் குசல் மெண்டிஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 100 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 65 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், பவன் ரத்நாயகே 48 ரன்கள், ஜனித் லியாநாகே 32 ரன்கள் மற்றும் பதும் நிசங்கா 25 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் ரிஹான் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the second ODI against England, the Sri Lankan team scored 321 runs for the loss of 6 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





