பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற ஆஸி.!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Australian players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் - படம் | AP

Published On :

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

மூவர் அரைசதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 272 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் மூவர் அரைசதம் விளாசி அசத்தினர். இன்னோசண்ட் கையா 55 ரன்களும், கிரைக் எர்வின் 59 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ராஸா 72 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். பிரையன் பென்னட் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஜோஷ் இங்லிஷ் சதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலியா!

272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் மிட்செல் மார்ஷ் 8 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக விளையாடிய ஜோஷ் இங்லிஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 102 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நாதன் எல்லிஸ் 36 ரன்கள், அலெக்ஸ் கேரி 34 ரன்கள் மற்றும் கூப்பர் கனோலி 21 ரன்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிராட் ஈவன்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிரீம் கிரெமர் மற்றும் சிக்கந்தர் ராஸா தலா இரண்டு விக்கெட்டுகளையும், வெஸ்லி மத்வீர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற முழுமையாக வென்று அசத்தியது.

Summary

Australia won the final ODI against Zimbabwe by one wicket in a thrilling match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.