
இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை; தோல்விக்குப் பிறகு மே.இ.தீவுகள் பயிற்சியாளர் பேச்சு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரவி ராம்பால் பேசியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் - படம் | AP
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரவி ராம்பால் பேசியுள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குவாஹாட்டியில் நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
406 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 43.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 255 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 133 பந்துகளில் 223 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளின் மோசமான பந்துவீச்சை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரவி ராம்பால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 400 ரன்களுக்கும் அதிகமான இலக்கை 43 ஓவர்களில் விரட்டிப் பிடித்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், மீண்டும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அடுத்தப் போட்டியை நோக்கி முன்னேற வேண்டும். இந்திய அணி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தது. எங்களது பந்துவீச்சுத் திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஆடுகளத்திலிருந்து பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை என்றார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 3) நியூ சண்டீகரில் நடைபெறுகிறது.
Summary
West Indies bowling coach Ravi Rampaul has spoken about the team's defeat in the second ODI against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







