பவுண்டரியுடன் சதம் அடித்த ஜோஷ் இங்லிஷ்..! 50 ரன்கள் முன்னிலையில் ஆஸி.!
ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஷ் தனது இரண்டாவது டெஸ்ட் சதம் விளாசியுள்ளது குறித்து...

சதம் அடித்த மகிழ்ச்சியில் ஜோஷ் இங்லிஷ் - AFP
ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஷ் சதம் விளாசி ஆட்டமிழந்தார். மொத்தமாக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவருக்கு இது இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 330/4 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, மூன்றாவது நாளில் விளையாடி வருகிறது.
ஜோஷ் இங்லிஷ் 132 பந்துகளில் சதமடித்தார். அதே ஓவரில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி தற்போது 102 ஓவர்களில் 379/5 ரன்கள் எடுத்து 50 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தற்போது களத்தில் கூப்பர் கானலி, அலெக்ஸ் கேரி விளையாடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா சார்பில் சிமோன் ஹார்மெர் 3, மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.
டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையே வெல்லும் என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியுற்றதுக்கு ஆஸ்திரேலியாவுக்கு பழிவாங்கும் வாய்ப்பாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது.
A resolute Test hundred from Josh Inglis as Australia add to their lead over South Africa in the #WTC27 series decider ð
— ICC (@ICC) October 29, 2026
ð: https://t.co/PbEtXCxPjY pic.twitter.com/ZjXpZPWonv
Summary
Hitiing four and second hundred in Test match cricket for Josh Inglis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


