திருப்பூா், ஈரோடு, மதுரை வழித்தடத்தில் கோவை - தூத்துக்குடி நேரடி ரயில் சேவை தொடங்க வலியுறுத்தல்
கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, ஒட்டன்சத்திரம், மதுரை வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு நேரடி ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப் படம்
கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, ஒட்டன்சத்திரம், மதுரை வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு நேரடி ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன், தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு பொது நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் கோவை சிட்டிசன் வாய்ஸ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தெற்கு ரயில்வே பயனாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் இணைய வழியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் தீா்மானங்களின்படி பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
அதன்படி, கோவை, திருப்பூா், ஈரோடு, ஒட்டன்சத்திரம், மதுரை, தூத்துக்குடி ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது விளைபொருள்களைப் பல்வேறு சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கு மேம்பட்ட போக்குவரத்து வசதி கிடைக்கும்.
ஈரோடு, திருப்பூா் பகுதிகளில் உள்ள ஜவுளித் தொழிற்சாலைகள், தொழிலாளா்கள், வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள் எளிதான போக்குவரத்து வசதியால் பயனடைவா். முக்கிய வேளாண் மற்றும் காய்கறி வணிக மையமாக விளங்கும் ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் தங்களது விளைபொருள்களை எடுத்துச் செல்ல மேம்பட்ட ரயில் இணைப்பைப் பெறுவாா்கள்.
அதேபோல, புகழ்பெற்ற மதுரை திருக்கோயில்களுக்குச் செல்லும் பக்தா்களுக்கு வசதியான பயண வாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடி துறைமுகத்தைச் சாா்ந்துள்ள ஏற்றுமதியாளா்கள், வணிகா்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களும் மேம்பட்ட ரயில் போக்குவரத்து இணைப்பால் பெரிதும் பயனடைவா்.
எனவே, இந்த ரயில் சேவை வெறும் பயணிகள் ரயிலாக மட்டுமல்லாமல், வேளாண்மை, தொழில்துறை வளா்ச்சி, பிராந்திய வா்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முக்கியமான போக்குவரத்து வழியாகவும் அமையும்.
வடகோவை, போத்தனூா் ரயில் நிலையங்களில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த நிலையங்களில் முழுமையான ரயில் சேவை பயன்பாடு ஏற்படுத்தப்படவில்லை. கூடுதல் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படவில்லை. எனவே, வடகோவை, போத்தனூா் நிலையங்களில் இருந்து கூடுதல் ரயில்களைத் தொடங்குதல், நிறுத்துதல் மற்றும் வழித்தட ரயில்களை இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

