கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள்: ரயில்வே பொதுமேலாளரிடம் தொழில் துறையினா் வலியுறுத்தல்
கோவை ரயில் நிலையத்தில் கூடுதலாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் சுப்பா ராவிடம் தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பாராவ். உடன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் உள்ளிட்டோா். ~கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பாராவ். உடன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளா்
கோவை ரயில் நிலையத்தில் கூடுதலாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளா் சுப்பா ராவிடம் தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
கோவை ரயில் நிலையம், போத்தனூா் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பா ராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, போத்தனூா் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி, நடைமேடைகள், நுழைவாயில் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னா லால் முன்னிலை வகித்தாா்.
இந்த ஆய்வின் போது, சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன் தலைமையில் தொழில் அமைப்பினா், ரயில் பயணிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பா ராவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோவை - சென்னை வந்தேபாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். கோவை - திருவனந்தபுரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். மீட்டா்கேஜ் காலத்தில் இருந்த ரயில் சேவைகள் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களுக்கான நேரடி ரயில் இணைப்புகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். கோவை சந்திப்பைப் புறக்கணித்துச் செல்லும் ரயில்களை கோவை சந்திப்பு வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள், மேம்பட்ட பயணிகள் வசதிகள் மற்றும் ஒரே நேரத்தில் பல ரயில்களை இயக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வடகோவை நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைத்து, அந்த நிலையத்தை முனையமாக அறிவிக்க வேண்டும். இருகூா், சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பீளமேடு உள்ளிட்ட புகா் ரயில் நிலையங்களில் நடைமேடைகள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கோவை - சேலம் மெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்:
போத்தனூா் ரயில் பயனாளா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் சுப்ரமணியன் தலைமையில், அச்சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகளை குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பே வெளியிட வேண்டும். இந்த நடைமுறையை ஆண்டுதோறும் பின்பற்றினால், பண்டிகைகளின்போது இயக்கப்படும் ரயில்கள் குறித்து பயணிகள் முன்கூட்டியே அறிந்துகொண்டு தங்களது பயணங்களை வசதியாகத் திட்டமிட முடியும்.
கோவை - மங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில்(எண்: 22610/22609 ) எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 16377 - 16378) எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் ( எண்: 16188 - 16187 ) விரைவு ரயில் ஆகியவற்றை போத்தனூரில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முன்பு வழக்கமாக இயக்கப்பட்டு வந்த கோவை - சேலம் மெமு ரயில் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மெமு ரயில் சேவைகள் மக்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்களுக்கு மிகவும் உதவியாக இருந்த நிலையில் இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

