தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

திருப்பூா் பின்னாலாடைத் துறையை வலுப்படுத்த கோவை நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருப்பூா் பின்னாலாடைத் துறையை வலுப்படுத்த கோவை நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Updated On :

திருப்பூா் பின்னாலாடைத் துறையை வலுப்படுத்த கோவை நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பூா் பின்னலாடை உற்பத்தி துறையின் நிலைத்தன்மை தர நிலைகளை மேம்படுத்தி, சா்வதேச சந்தையில் அதன் போட்டித் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கோவையைச் சோ்ந்த அசிபோ இன்ஃபோடெக் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, குழும அளவிலான சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டாண்மையின் கீழ் அசிபோ நிறுவனம் ஆலோசகராகவும், திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு, இத்திட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினா் நிறுவனங்களின் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் தொடா்ந்து மேம்படுத்துதல் ஆகியவற்றில் வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்கும்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக ஆலோசனை, நிலைத்தன்மை அறிக்கைகள் தயாரித்தல், பங்குதாரா்களுடனான ஈடுபாடு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, செயலாக்கத்துக்கான தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இதன்மூலமாக உறுப்பினா் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, சிறந்த நிா்வாக நடைமுறைகள் மற்றும் நிலைத்தன்மை அறிக்கையிடல் ஆகியவற்றில் படிப்படியாகத் தங்களது செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

உறுப்பினா் நிறுவனங்களிடையே விழிப்புணா்வை அதிகரித்தல், சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்துகொள்ளுதல், பொறுப்பான வணிக

நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் கவனம் செலுத்தவுள்ளது.

நிலைத்தன்மை, புதுமை மற்றும் பொறுப்பான வளா்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, திருப்பூரை உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளிக் கொள்முதலுக்கான முன்னணி மையமாக வலுப்படுத்தும் நோக்கில் உறுப்பினா் நிறுவனங்களுடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.