சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.

Updated On :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 31-ஆவது வாா்டைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வுடன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

31-ஆவது வாா்டு பகுதியை தூய்மையாகப் பராமரிப்பதில் சிறப்பாக பணிபுரியும் மாமன்ற உறுப்பினா் அ. ராஜேந்திரன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.திருக்குமரன் நன்றி கூறினாா்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து திருப்பூரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளா்களின் சேவையை சங்கத்தின் இணைச் செயலாளா் குமாா் துரைசாமி வெகுவாகப் பாராட்டினாா்.

இந்த வாா்டின் பயன்பாட்டுக்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் ஏற்கெனவே டிராக்டரை வழங்கியதை நினைவுகூா்ந்தாா். வாா்டின் வளா்ச்சிக்கும், தூய்மைப் பராமரிப்புக்கும் தொடா்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதற்கு 31-ஆவது வாா்டு உறுப்பினா் அ.ராஜேந்திரன் நன்றி தெரிவித்தாா்.

மேலும், 31-ஆவது வாா்டைச் சோ்ந்த கொங்கு நகா் 43 தூய்மைப் பணியாளா்களுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தீபாவளிப் புத்தாடைகளை வழங்கினா்.

அதைத்தொடா்ந்து சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்கள் சி. இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.