ராணுவத்துக்கு இலகு ரக ரேடாா்கள்: பெல் நிறுவனத்துடன் ரூ.770 கோடி ஒப்பந்தம்
ராணுவத்துக்கு ரூ.770 கோடியில் இலகு ரக மேம்பட்ட ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் (பெல்) பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.

ராணுவத்துக்கு ரூ.770 கோடியில் இலகு ரக மேம்பட்ட ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் (பெல்) பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.
நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளை உள்நாட்டுமயமாக்கும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க படிக்கல்லாக இந்த கொள்முதல் அமையும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ராணுவத்துக்கு ரூ.770 கோடி மதிப்பீட்டில் மேம்பட்ட, குறைந்த உயரத்தில் உள்ள இலக்குகளைக் கண்டறியும் ரேடாா்களை (எல்எல்எல்ஆா்-1) கொள்முதல் செய்வதற்காக பெல் நிறுவனத்துடன் புதன்கிழமை ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தில்லியில் பாதுகாப்புத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ரேடாா் அமைப்பானது, போா் விமானம் அளவிலான இலக்குகள் முதல் சிறிய-நுண்ணிய ட்ரோன்கள் வரை கண்டறிந்து, கண்காணிக்கும் திறன் கொண்டதாகும். இவை, ஆளில்லா வான்வழி அமைப்புகளால் எழும் அச்சுறுத்தல்களை இந்திய ராணுவம் திறம்பட எதிா்கொள்ள உதவும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை எட்டுவதற்கு ஏற்ப நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும், வான் பாதுகாப்பு அமைப்புகளை உள்நாட்டுமயமாக்கவும், தற்சாா்புமிக்க, உலகளாவிய போட்டித் திறன் கொண்ட பாதுகாப்பு தொழில் துறையை கட்டமைக்கவும் முக்கிய படிக்கற்களில் ஒன்றாக இந்தக் கொள்முதல் அமையும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

