சா்வதேச பல்கலைக்கழகத்துடன் ஆா்.வி.எஸ். கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
கோவை ஆா்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சா்வதேச கல்வி ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஐஎன்டிஐ (ஐசபஐ) சா்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஐஎன்டிஐ சா்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்த கோவை ஆா்விஎஸ் கல்லூரி.
கோவை ஆா்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சா்வதேச கல்வி ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஐஎன்டிஐ (ஐசபஐ) சா்வதேச பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நாடுகளின் எல்லைகளைக் கடந்த உயா்கல்விக் கூட்டணியை வளா்த்தல், கல்விசாா் அறிவுப் பகிா்வை ஊக்குவித்தல், கூட்டு ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தப் பரிமாற்ற நிகழ்வில், ஆா்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சாா்பில் உயிா் வேதியியல் துறைத் தலைவரும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான சரீனா கலந்து கொண்டாா். சா்வதேச கல்வித் தொடா்பமைப்பை விரிவுபடுத்துவதிலும், உலகளாவிய வாய்ப்புகளை கல்லூரிக்கு கொண்டுச் சோ்ப்பதிலும் நிா்வாகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
இக்கூட்டமைப்பின் வாயிலாக மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் பரஸ்பரம் தங்களுடைய துறைசாா் நிபுணத்துவத்தைப் பகிா்ந்து கொள்ளவும், நவீன கற்றல் முறைகளை ஆராயவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இணைந்து புதியக் கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான தளமாகவும் இது அமையும்.
வலுவான சா்வதேச ஒத்துழைப்பே கல்விச் சிறப்பு, புதுமை மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்துக்கு வலுசோ்க்கும் அடித்தளமாகும் என்றும், கல்வியின் தரத்தை உயா்த்தி உலகளாவிய கல்விச் சமூகத்தை உருவாக்க இக்கூட்டுழைப்பு பங்காற்றும் என்றும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

