வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக்கு 430 மின்சார பைக்குகளை வழங்குகிறது இந்தியா: புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்

இலங்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கள அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 430 மின்சார மோட்டாா் சைக்கிள்களை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

இலங்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கள அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 430 மின்சார மோட்டாா் சைக்கிள்களை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா, இலங்கை மீன்வளத் துறை செயலாளா் பி.கே. கோலிடா கமால் ஜினதாச ஆகியோா் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டனா். இந்நிகழ்வில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொண்டாா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை மீன்வளத் துறை, ஆழ்கடல் வளங்கள் துறை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் கள அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக 430 மின்சார பைக்குகளை இந்தியா வழங்குகிறது. இதற்காக இலங்கை ரூபாய் மதிப்பில் 26.5 கோடியை உதவித் தொகையாக இந்தியா அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.