தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

தவெக கூட்டணி, ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை?

தவெக கூட்டணி, ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்...

CM Vijay holds consultations with MLAs from TVK alliance and supporting parties

முதல்வர் ஆலோசனை - கோப்புப் படம்

Updated On :

தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவும் தெரிவித்தன.

இதனிடையே, தவெக அமைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுகவும் இணைந்தன. இருப்பினும், இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வெளியில் இருந்து ஆதரவளித்து வருகின்றன.

ஜூலை 1-ல் தவெக கூட்டணிக் கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து, செப். 9-ல் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய்யின் முகாம் இல்லத்தில் நாளை (நவ. 23) ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Summary

CM Vijay holds consultations with MLAs from TVK alliance and supporting parties

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.