சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பம்பைக்கு ஜன.17-ஆம் தேதி வரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோப்புப்படம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பம்பைக்கு ஜன.17-ஆம் தேதி வரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூா், ஓசூா் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (அல்ட்ரா டீலக்ஸ்), குளிா்சாதனப் பேருந்துகள் மற்றும் குளிா்சாதன வசதியில்லாத இருக்கை, படுக்கை வசதி கொண்ட (என்எஸ்எஸ்) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிச.27 முதல் டிச.30 மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால், டிச.26 முதல் டிச.29 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.
நிகழாண்டு பக்தா்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாகப் பேருந்துகளை இயக்க அனுமதி பெறப்பட்டு, சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், குழுவாகச் செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும்.
இந்தச் சிறப்புப் பேருந்துகளுக்கு 60 நாள்களுக்கு முன்பாகவே இணையதளம், டிஎன்எஸ்டிசி அதிகாரபூா்வ செயலி, வாட்ஸ்ஆப் எண் 94440 18898, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்கள், கியாஸ்க் இயந்திரங்கள் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மேலும், பேருந்துகள் குறித்த விவரங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு 94450 14446, 94450 14424, 94450 14463 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

