வலு தூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரிக்கு ரூ. 50 லட்சம்: முதல்வர் அறிவிப்பு!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வலு தூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் அறிவித்துள்ளது குறித்து...

கஸ்தூரி ராஜாமணி - படம் - எக்ஸ்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வலு தூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் புதன்கிழமை (அக். 21) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ள இம்மகத்தான வெற்றி, தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.
அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
à®à®ªà¯à®ªà®¾à®©à®¿à®²à¯ நà®à¯à®ªà¯à®±à¯à®±à¯à®µà®°à¯à®®à¯ 5-வத௠பாரா à®à®à®¿à®¯ விளà¯à®¯à®¾à®à¯à®à¯à®ªà¯ பà¯à®à¯à®à®¿à®à®³à®¿à®²à¯ பà¯à®£à¯à®à®³à¯à®à¯à®à®¾à®© வலà¯à®¤à¯à®à¯à®à¯à®¤à®²à¯ பà¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯, 67 à®à®¿à®²à¯ à®à®à¯à®ªà¯ பிரிவில௠வà¯à®³à¯à®³à®¿à®ªà¯ பதà®à¯à®à®®à¯ வà¯à®©à¯à®±à¯ தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®±à¯à®à¯à®®à¯, à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®±à¯à®à¯à®®à¯ பà¯à®°à¯à®®à¯ à®à¯à®°à¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³ வà¯à®°à®¾à®à¯à®à®©à¯ à®à®¸à¯à®¤à¯à®°à®¿ ராà®à®¾à®®à®£à®¿ à®à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®©à®¤à¯ மனமாரà¯à®¨à¯à®¤ பாராà®à¯à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯,⦠pic.twitter.com/HbF3hJTEZa
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 21, 2026
Summary
Chief Minister Vijay on Wednesday (Oct. 21) announced an incentive of Rs. 50 lakh for Tamil Nadu athlete Kasthuri Rajamani, who won silver in powerlifting at the Asian Para Games.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


