பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் - படம் | ANI
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக பிராட் ஹேடின் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரும் அவர்களது பயிற்சியாளர்கள் பொறுப்பிலிருந்து கடந்த மாதம் விலகினர்.
இதனையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ராஜீவ் குமார் இருவரும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் செயல்பட்டு வந்த பராஸ் மாம்ப்ரே, கடந்த மாதம் அவரது பொறுப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில், அவர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.
பராஸ் மாம்ப்ரே இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுன் இணைந்து இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராஜீவ் குமார், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் கோப்பைக்கானத் தேடலில் உள்ளது. அந்த அணி கடந்த 2014 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் நிறைவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியது குறிப்பிடத்தக்கது.
Summary
New bowling and fielding coaches are set to be appointed for the Punjab Kings team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

