எனது அணி பஞ்சாப், கேப்டன் ஷ்ரேயாஸ்! உங்கள் பின்னால் நிற்பேன்! ஹார்திக் பாண்டியா
பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ள ஹார்திக் பாண்டியா பதிவு...
ஹார்திக் பாண்டியா - Instagram | Hardik Pandya
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ள ஹார்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். ஹார்திக் பாண்டியாவின் வருகைக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அணியை கடந்த மூன்று சீசன்களாக ஹார்திக் பாண்டியாக கேப்டனாக வழிநடத்தி வந்தார்.
இருப்பினும், கடந்த மூன்று சீசன்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த மூன்று சீசன்களில் மும்பை அணி ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.
இந்த நிலையில், ஹார்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் டிரேடிங் செய்ததாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹார்திக் பாண்டியா, ”எனது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், எனது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், எனது அணி ஒட்டுமொத்த பஞ்சாப்பும். உங்கள் பின்னால் நான் நிற்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து செயல்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஹார்திக் பாண்டியாவின் பதிவில் கமெண்ட் செய்துள்ள நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, “வாழ்த்துகள் ஹார்திக் பாண்டியா, பஞ்சாப் அணிக்கு முதல் கோப்பை காத்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
My team is Punjab, and the captain is Shreyas! I will stand behind you! — Hardik Pandya
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


