மழைக்கால நோய்த் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன்சிஜேபி தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ்!எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி! புயலைக் கிளப்பும் புதிய படங்கள்!முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!

6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 48 காசுகள் உயர்ந்து ரூ. 94.43 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய் | கோப்புப் படம்

Updated On :

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ தொடர்பான அந்நிய செலாவணி வரவும் மற்றும் டாலர் தேவையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தலையீடு உள்ளிட்டவையால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 48 காசுகள் உயர்ந்து ரூ. 94.43 ஆக நிலைபெற்றது.

இருப்பினும், பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தை மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை ரூபாய் மீதான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அந்நிய செலாவணி வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.78 ஆக தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 94.41 சென்ற நிலையில் குறைந்தபட்சமாக ரூ. 94.82 ஐ எட்டியது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 48 காசுகள் உயர்ந்து டாலருக்கு நிகராக ரூ. 94.43 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய் இதற்கு முன்னதாக செப்டம்பர் 04 ஆம் தேதியன்று இதே போன்று பயணித்தது.

நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பு, டாலருக்கு நிகராக 2 காசுகள் சரிந்து ரூ. 94.91ஆக நிறைவடைந்தது. தசரா பண்டிகையை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய செலாவணி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Summary

The rupee surged 48 paise to close at 94.43 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.