டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு.

கோப்புப் படம்

Updated On :

மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சி ஆகியவற்றின் காரணமாக, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்து, டாலருக்கு நிகரான மதிப்பில் 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிலைபெற்றது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறி வருவதும் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் ஏற்பட்ட தொடர்ச்சியான அழுத்தத்தின் மத்தியில், ரூபாய் தனது ஆறு நாள் தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எதிர்மறையாக பயணித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.90 ஆக தொடங்கி, இன்றைய வர்த்தகத்தில், அதிகபட்சமாக ரூ. 94.75 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 94.97 ஐ எட்டியது. பிறகான வர்த்தகத்தில், முந்தைய நாள் முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிலைபெற்றது.

ரிசர்வ் வங்கி, டாலரின் தேவையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையால், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து 6 வது நாளாக ஏற்றம் கண்டு, டாலருக்கு நிகராக 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.89 ஆக இருந்தது.

Summary

The rupee pared its initial gains and settled lower by 3 paise for the day at 94.92.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.