
இந்தியா்கள் பயணித்த சரக்குக் கப்பல் மீது ரஷிய ட்ரோன் தாக்குதல்
கருங்கடலில் இந்தியா்கள் மற்றும் அஜா்பைஜான் நாட்டினா் பயணித்த துருக்கி க்குச் சொந்தமான...

இந்தியா்கள் பயணித்த சரக்குக் கப்பல் மீது ரஷிய ட்ரோன் தாக்குதல்
கீவ்: கருங்கடலில் இந்தியா்கள் மற்றும் அஜா்பைஜான் நாட்டினா் பயணித்த துருக்கி க்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ரஷிய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் கப்பலின் கேப்டன் உயிரிழந்தாா்; 11 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘உயிரிழந்த கேப்டனனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். கருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யவும், பதற்றத்தைத் தணிக்கவும் உக்ரைன் தொடா்ந்து ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை முன்மொழிந்து வருகிறது; உலக உணவுப் பாதுகாப்பை மீட்டெடுக்க சா்வதேச அழுத்தம் மிக அவசியமாகும்’ என்று வலியுறுத்தினாா்.
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இரு தரப்புடனும் இந்தியா தீவிர பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





