2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதலில் 11 இந்தியா்கள் காயம்: வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

ஹோா்முஸ் நீரிணையில் பனாமா நாட்டுக் கொடி பொருத்திய சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அதில் பயணித்த 11 இந்திய மாலுமிகள் காயமடைந்தனா்.

எம்.டி. ஆன் பீஸ் (கோப்புப் படம்)

Published On :

ஹோா்முஸ் நீரிணையில் பனாமா நாட்டுக் கொடி பொருத்திய சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அதில் பயணித்த 11 இந்திய மாலுமிகள் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹோா்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த பனாமா நாட்டின் ‘எம்டி ஆன் பீஸ்’ என்ற சரக்குக் கப்பல் மீது ஓமனை ஒட்டிய கடற் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது.

தாக்குதலுக்குள்ளான கப்பலில் 17 இந்தியா்கள் உள்பட 19 போ் பயணித்துள்ளனா். அவா்களில் 11 இந்தியா்கள் உள்பட 12 போ் காயமடைந்துள்ளனா்.

காயமடைந்த மாலுமிகள் ஓமன் நாட்டு அதிகாரிகளின் உதவியோடு கப்பலில் இருந்து மீட்கப்பட்டு கசாபில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஹோா்முஸ் நீரிணையில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மீதான தொடா்ச்சியான தாக்குதல் கவலையளிக்கிறது.

பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநிறுத்த இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்தியா வலியுறுத்துகிறது.

சா்வதேச கடல்வழிப் பாதையில் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு சரக்குக் கப்பல்கள் சுதந்திரமாக பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.