தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

தாராபுரத்தில் 30 இடங்களில் மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!

தாராபுரத்தில் 30 இடங்களில் முதல்வர் விஜய் மக்களை சந்திக்கவுள்ளது குறித்து...

CM Vijay's speech

தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா, முதல்வர் விஜய் - X

Published On :

தாராபுரத்தில் 30 இடங்களில் முதல்வர் விஜய் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) மக்களை சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. எனவே, தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு இன்று மீண்டும் வருகைதந்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

தாராபுரத்தில் மேட்டுக்கடை பகுதியிலிருந்து தாசர்புரம் வரையில் 114 கி.மீ தொலைவுக்கு சுமார் 30 இடங்களில் சாலை வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தவெக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று மதியம் 1.00 மணி அளவில் மாருதி நகரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார்.

அவரது வாகனப் பிரசாரம் பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

1.மாருதி நகர் 2.உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு 3.காவல்நிலையம் சந்திப்பு 4.ஐந்து சாலை சந்திப்பு 5.மீனாட்சிபுரம் 6.குளத்துப்பாளையம் 7.கரையூர் 8.மூலனூர் 9.வஞ்சியம்மன் கோயில், காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகனங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது. முதல்வரின் தாராபுரம் தொகுதி வாகனப் பிரசாரத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

இந்தப் பிரசாரத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் வாகனப் பிரசாரத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, பிரசாரம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Vijay is set to meet the public at 30 locations in Dharapuram on Sunday (Oct. 4).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.