மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலையும் சரிவு! (நவ. 6)

தீபாவளி அன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்திருப்பது பற்றி...

diwali

தீபாவளி - கோப்புப்படம்.

Updated On :

தீபாவளி அன்று சென்னையில் மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு எல் நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் முன்கணிப்பை வெளியிட்டுள்ளார்.

வருகின்ற நவ. 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கொண்டாட்டத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மழை பெய்யுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

கடந்த ஒரு வாரமாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் வானிலை முன்னறிவிப்பிலும் நவ. 8 ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு வருகின்றது.

இந்த நிலையில், பிரதீப் ஜான் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“தற்போது அழகான மேகக் கூட்டம் ஒன்று சென்னை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது வழக்கமான கிழக்கு அலை மேகங்கள். ரசிக்கத்தக்க கனமழை பெய்யும்.

அடுத்த இரண்டு நாள்கள் இதே நிலைதான் தொடரும். வெய்யில், பின்னர் திடீரென மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தீபாவளி அன்று கொண்டாட்டத்தை கெடுக்கும் வகையிலான பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Possibility of rain in Chennai on Diwali!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER