சென்னையிலிருந்து சொந்த வாகனங்களில் ஊர் செல்வோர் கவனத்துக்கு...
சென்னையிலிருந்து சொந்த வாகனங்களில் ஊர் செல்வோர் கவனத்துக்கு...

ஜிஎஸ்டி சாலை - கோப்புப்படம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து சொந்த வாகனங்களில் ஊருக்குச் செல்வோருக்கு காவல்துறையினர் மாற்று வழியை அறிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்து, ரயில், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து கூடுதல் அரசுப் பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோருக்கு வழித்தட மாற்றம் செய்து சென்னை மற்றும் தாம்பரம் மாநகரக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெளியூர் செல்வோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூா் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, (ஓஎம்ஆா்) திருப்போரூா் - செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளை சொந்த வாகனங்களில் ஊருக்குச் செல்வோர் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பூந்தமல்லியிலிருந்து வரும் வணிக வாகனங்கள், கனரக வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாமல் ஆலப்பாக்கம் சந்திப்பில் திருப்பி அனுப்பப்படும் என்றும், மாதவரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி வரும் வணிக வாகனங்கள்,கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் அனுமதிக்கப்படாமல் செங்குன்றம் வழியாக 200 அடி புறவழிச்சாலை வழியாகத் திருப்பி விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம், ஜிஎஸ்டி நோக்கி வரும் கனரக வாகனங்கள், மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு பூந்தமல்லி நோக்கி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
For those traveling from Chennai to their hometowns in private vehicles...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


