தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்! முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

சென்னை போக்குவரத்துக் காவல்துறைக்கு 50 புதிய இருசக்கர வாகனங்கள்!

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய வாகனங்கள்... சென்னை காவல்துறையின் புதிய முயற்சி

Chennai Traffic Police

புதிய இருசக்கர வாகனங்கள் - video crop

Updated On :

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக ஹோண்டா நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 50 புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இலகுரக வாகனத்தின் இயக்கத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துக் காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, காவல் ஆணையாளர் அமல்ராஜ் கொடியசைத்து வாகனங்களின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

Story image

புதிதாக வழங்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், சென்னை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் களப்பணிகளை விரைந்து மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம், போக்குவரத்துக் காவலர்கள் முக்கியச் சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் விரைந்து சென்று பணியாற்ற உதவியாக இருக்கும்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, காவல் ஆணையாளர் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட புதிய வாகனங்கள் தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

50 new two-wheelers for the Chennai Traffic Police! Chennai Metropolitan Police Commissioner Amalraj flagged them off.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.