சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இருசக்கர வாகனங்கள் சாகசம்: 16 பேர் கைது, 67 வாகனங்கள் பறிமுதல்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி..

Two-wheeler stunts near Chennai Valluvar Kottam: 16 arrested, 67 vehicles seized

இருசக்கர வாகன சாகசம்.

Published On :

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சாகசத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைது செய்யத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வீலிங் மற்றும் பிற சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுபோன்ற ஆபத்தான செயல்களைத் தடுக்க, நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Summary

Police arrested 16 people for engaging in two-wheeler stunts near Valluvar Kottam in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.