சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிர்ப்பு: இன்று வழக்கு விசாரணை

வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை குறித்து...

Vettri Payanam

வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிராக வழக்கு - X | CMO

Published On :

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று (அக். 5) விசாரணைக்கு வருகிறது.

முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயண திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்.

தவெக தலைமையில் ஆட்சி அமைந்தபின், தமிழகம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய வகை செய்யும், வெற்றிப் பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், வெற்றிப் பயண திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், வெற்றிப் பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு ரூ. 6,000 கோடியை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வரின் அறிவிப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் , இந்தத் திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிரான இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், இன்று (அக். 5) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Summary

The case against the TVK's 'Vettri Payanam' scheme is being heard today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER