மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

வெற்றி பேருந்து பயண திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்யும் ஆட்டோ ஓட்டுநா்கள்.

வெற்றி பேருந்து பயண திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்யும் ஆட்டோ ஓட்டுநா்கள்.

Updated On :

வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொன்னேரியில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் வெற்றிப் பயண திட்டம் காரணமாக பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய தொழிலாளா்கள் இலவச பேருந்து பயண திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி ஏற்றம் கண்டு வரும் நிலையில் தங்களது வாழ்வாதாரம் நலிந்து வருவதாக வேதனை தெரிவித்தனா். தவெக தலைவா் ஜோசப் விஜய் முதல்வராக வேண்டும் என விசில் சின்னத்துக்கு வாக்களித்த 5 லட்சம் ஆட்டோ ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்தனா்.

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தது போல, வெற்றி பயண திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

மேலும், ஆட்டோ மீட்டா் கட்டணத்தை ஒழுங்குபடுத்திட வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.