கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)! இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்துநவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து

புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் - திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு குறித்து...

DMK MP Kanimozhi met Anbil Mahesh at Puzhal Prison!

புழல் சிறை வளாகத்தில் கனிமொழி எம்.பி.

Updated On :

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை சந்தித்தார்.

அப்போது, ஜாமின் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அன்பில் மகேஸை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சந்தித்த நிலையில், தற்போது கனிமொழியும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், இன்று சென்னை புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை நேரில் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் விடுதலை பெற்று, மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப விழைகிறேன். இதுபோன்ற எத்தகைய அடக்குமுறைகளுக்கும் கழகம் ஒருபோதும் அடிபணியாது! எனப் பதிவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், கார் ஓட்டுநர் சரவணன் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறப்பு நீதிமன்றம் நவ. 10-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அன்பில் மகேஸ் தரப்பில் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவலை டிச. 2-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

Summary

DMK MP Kanimozhi met former minister Anbil Mahesh, who is lodged in Puzhal Prison, on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.