புழல் சிறையில் அன்பில் மகேஸை மீண்டும் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்! தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? பிரபல பெண் ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு!ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!

புழல் சிறையில் அன்பில் மகேஸை மீண்டும் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சந்தித்திருப்பது பற்றி...

Udhayanidhi Stalin met Anbil Mahesh again at Puzhal Prison!

புழல் சிறை வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3-வது முறையாக இன்று சந்தித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள அவரை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது முறையாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர்.

ஏற்கெனவே இருமுறை சிறையில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும், கடந்த வாரம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Leader of the Opposition Udhayanidhi Stalin met former Minister Anbil Mahesh Poyyamozhi, who is lodged in Puzhal Prison, for the third time today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.