இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் தீ விபத்து: 34 தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து....

தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை.
இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தைத்தொடர்ந்து காணாமல் போன 34 தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்துள்ளனர்.
இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ள மிட்டாய் தொழிற்சாலையில் சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடிக் கட்டடம் முழுவதும் பரவிய தீயை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 14 மணி நேரம் போராடி பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் சுமார் 300 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 63 பேர் அதிக பாதிப்புக்குள்ளான பகுதியில் குறிப்பாக, குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்து தீ உருவான இரண்டாவது மாடியில் இருந்ததாக நம்பப்படுகிறது.
பலியானவர்களின் எண்ணிக்கையை உடனடியாக வெளியிடாத இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை, தடயவியல் பரிசோதனை மூலம் அடையாளம் காண்பதற்காக 24 சடலப் பைகளில் மனித உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே, 29 தொழிலாளர்களை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிற்சாலையில், உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தோனேசியாவின் பால் சார்ந்த மிட்டாய் மற்றும் தின்பண்ட பிராண்டான 'மில்கிடா' தயாரிக்கப்படுகிறது.
Summary
Indonesian rescuers searched Monday for 34 missing workers after a deadly fire swept through a candy factory west of Jakarta.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


