தாய்லாந்து: வணிகக் கட்டட தீ விபத்தில் 11 பேர் பலி!
தாய்லாந்தில் வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பற்றி...

தீ விபத்து ஏற்பட்ட கட்டடம்.
தெற்கு தாய்லாந்தில் வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் புக்கெட்டில் உள்ள வணிகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் இருசக்கர வாகன வாடகை கடையும், மேல் தளங்களில் குடியிருப்புகளும் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டடத்தில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் லேசான காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தீயிலிருந்து தப்பிக்க மேல் தளங்களுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதில் ஒரு உடல் மூன்றாவது தளத்திலும், மற்ற 10 உடல்கள் ஐந்தாவது தளத்திலும் கண்டெடுக்கப்பட்டன.
பூக்கெட் காவல் துறை தளபதி சுராசாய் சூக்சாய் கூறுகையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஆரம்பகட்ட விசாரணையில் தீ விபத்து ஏற்படுவதற்குச் சற்று முன்பு கட்டடத்திற்கு அருகில் இருந்த மின்மாற்றி ஒன்று வெடித்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு தீவான புக்கெட், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும்.
Summary
A fire burned through a building in southern Thailand early Monday, killing 11 people, authorities said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


