டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

தெற்கு தில்லியில் கியா ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 7 பேர் காயம், 12 பேர் மீட்பு!

தெற்கு தில்லியில் கியா ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து....

Massive fire at south Delhi Kia showroom leaves seven injured, 12 rescued

தீ விபத்து ஏற்பட்ட கியா ஷோரூம்.

Updated On :

தெற்கு தில்லியில் கியா ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

தெற்கு தில்லியின் சைதுலாஜாப் பகுதியில் அமைந்துள்ள கியா கார் ஷோரூமில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்ததுடன், 12-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தீயைக் கட்டுப்படுத்த தில்லி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையின் பல குழுக்கள் களமிறக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை அறியத் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த பல கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்தைத் தொடர்ந்து கரும்புகை விண்ணைத் தொடும் அளவிற்கு எழுந்தது. மேலும் ஷோரூம் அருகே மக்கள் கூட்டமும் கூடியது.

அவ்வழியாகச் சென்ற பலர், தங்கள் கைப்பேசியில் தீ விபத்தைப் படம் பிடித்தனர். அருகிலுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் போன்ற சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு கூடியிருந்தவர்களைக் கலைத்த காவல் துறையினர், அவசர கால வாகனங்கள் தடையின்றிச் செல்ல வழிவகை செய்தனர்.

Summary

A massive fire broke out at a Kia car showroom in south Delhi's Saidulajab area on Friday, gutting several vehicles and leaving seven people injured, while around 12-15 others were rescued, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.