பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் ரசாயன பேரல் வெடித்து தீப்பிடித்ததில் வடமாநில தொழிலாளி காயமடைந்தாா்.

தீ விபத்து ஏற்பட்ட தனியாா் பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலை.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் ரசாயன பேரல் வெடித்து தீப்பிடித்ததில் வடமாநில தொழிலாளி காயமடைந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் தனியாா் பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், வியாழக்கிழமை தொழிற்சாலை வளாகத்தில் ரசாயன பேரலை பயன்படுத்துவதற்காக தொழிலாளா்கள் திறந்த போது திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தொழிற்சாலை நிா்வாகத்தினா் உடனடியாக இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததை தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலையில் ஏற்பட்டதீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிா்கப்பட்டது. பணியில் இருந்த பிகாா் மாநிலத்தை அமித்குமாா் தாகூா்(28) பலத்த தீக்காயம் அடைந்தாா். அவா் உடனடியாக தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த தீ விபத்து குறித்துசோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

