சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!

சென்செக்ஸ் 125.56 புள்ளிகள் குறைந்து 73,123.83 ஆகவும், நிஃப்டி 171.25 புள்ளிகள் சரிந்து 22,516.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை

Updated On :

மும்பை: மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை 114 டாலரை எட்டியதன் எதிரொலியாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீடுகளும் இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4வது வர்த்தக அமர்வாக சரிவுடன் முடிவடைந்தன.

சென்செக்ஸ் இன்று உயர்வுடன் வர்த்தகமான நிலையில், வர்த்தகத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் 797.02 புள்ளிகள் சரிந்து 72,452.37 புள்ளிகளாகவும், இன்றைய இன்ட்ராடே குறைந்தபட்சத்தை நிலையை எட்டியது. பிறகான வர்த்தகத்தில், சற்று சமம் செய்து மீண்ட நிலையில், வர்த்த முடிவில் சென்செக்ஸ் 125.56 புள்ளிகள் குறைந்து 73,123.83 ஆகவும், நிஃப்டி 171.25 புள்ளிகள் சரிந்து 22,516.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

டாடா ஸ்டீல் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து, மிகப்பெரிய பின்தங்கிய நிறுவனங்களாக உருவெடுத்தன.

சென்செக்ஸில் ட்ரென்ட், டெக் மஹிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், இண்டிகோ, பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. இதற்கு மாறாக எடர்னல், லார்சன் & டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுஸுகி இந்தியா, இன்ஃபோசிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தன.

அனைத்து துறை குறியீடுகளும் கன்ஸ்யூமர் டூரபிள் 3 சதவீதம் சரிந்த நிலையில், ரியால்டி, எனர்ஜி, மெட்டல், பிஎஸ்யு வங்கி பங்குகள் தலா 2 சதவீதத்துக்கு மேல் சரிந்தன.

உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் விநியோக இடையூறுகள் குறித்த அச்சம், ஐடி பங்குகள் பலவீனம் மற்றும் அதிகரித்து வரும் மேற்கு ஆசிய பதற்றங்கள், பணவீக்கம், ரூபாய் மதிப்பு குறித்த அச்சம் அதிகரித்ததால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 114 அமெரிக்க டாலர்களை நெருங்கியது.

தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் ரூ.3,458.70 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதே சமயம் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,891.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகள் ஆரம்ப இழப்புகளை சற்றே சமம் செய்து பெருமளவில் மீண்டன். ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவை உயர்நதன. இருப்பினும், ஜப்பானின் நிக்கேய் 225 பெஞ்ச்மார்க் சரிந்து முடிவடைந்தது.

ஐரோப்பிய சந்தைகள் இன்று சரிந்த நிலையில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 1.10 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 114.42 டாலருக்கு மேல் வர்த்தகமானது.

Summary

Benchmark equity indices Sensex and Nifty ended lower for the fourth consecutive session on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.