ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மெஸ்ஸி அசிஸ்ட், ரோட்ரிகோ அசத்தல்: பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றது இன்டர் மியாமி!

எம்எல்எஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றது குறித்து...

Rodrigo named Man of the Match; Inter Miami qualifies for the playoffs

ரோட்ரிகோ ஆட்ட நாயகன், பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றது இன்டர் மியாமி - படங்கள்: எக்ஸ் / இன்டர் மியாமி சிஎஃப்

Updated On :

எம்எல்எஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றது. நியூ யார்க் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்டர் மியாமி அணி ஜூலைக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமியின் ரோட்ரிகோ டி பால் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.

இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் நியூ யார்க் சிட்டி உடன் இன்று காலை மோதியது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமியின் ஜெர்மன் பெர்டெராமே 20ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மெஸ்ஸி அசிஸ்ட்டில் 45+5ஆவது நிமிஷத்தில் ரோட்ரிகோ டி பால் கோல் அடித்தார். முதல் பாதியில் 2-0 என இன்டர் மியாமி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் நியூ யார்க் அணி எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவில்லை. இறுதிக்கட்ட நேரத்தில் பெனால்டியில் கோல் அடிக்கவும் தவறியது. இறுதியில் இன்டர் மியாமி 2-0 என வென்றது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்டர் மியாமி அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடியதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த வெற்றியுடன் இன்டர் மியாமி அணி எம்எல்எஸ் 2026 கோப்பைக்கான பிளே ஆப்ஸுக்குத் தகுதி பெற்றது. கிழக்கு மற்றும் மேற்கு கான்பிரன்ஸ் பிரிவுகளில் தலா 9 அணிகள் பிளே ஆப்ஸில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி தலைமையில் 2024 கோப்பையை தவறவிட்ட இன்டர் மியாமிக்கு 2025ல் முதல்முறையாக கோப்பை கிடைத்தது. தற்போது, மீண்டும் கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Messi assists as Inter Miami clinches MLS playoff berth with 2-0 win over NYCFC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.