போராட்டம் எதிரொலி: தில்லிக்கு மேலும் 23,000 பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைப்பு!
இந்தியா கூட்டணி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தில்லிக்கு மேலும் 23,000 பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைப்பு...

கோப்புப் படம் - IANS
இந்தியா கூட்டணி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் 23,000 பாதுகாப்புப் படை வீரர்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகக் கூறி அவரை பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணிக் கட்சிகள் தற்போது நடத்தும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். கரப்பான் பூச்சி கட்சியும் வருகிற அக். 10 ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தில்லியில் ஏற்கெனவே கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் உள்ள நிலையில் மேலும் 23,000 பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், சத்தீஸ்கரில் பணியாற்றும் 221 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 23,000 சிஏபிஎஃப் (மத்திய ஆயுத காவல் படையினர்) வீரர்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அக்டோபர் 8 முதல் 12 வரை தில்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம், ஜூலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு போடப்பட்ட பாதுகாப்பைவிட இது அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், சட்டம் - ஒழுங்கு பணிகளுக்காகவும் இந்தப் படைப் பிரிவுகள் கொண்டு வரப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Delhi to deploy 23,000 CAPF personnel. Forces pulled from JK, Naxal operation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






