தெற்கு ரயில்வே மண்டல நிலையங்களில் 10 மாதங்களில் 413 குழந்தைகள் மீட்பு

தெற்கு ரயில்வே நிலையங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 413 சிறுவா், சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரதிப் படம்

Updated On :

சென்னை சென்ட்ரலில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 9 வயது சிறுவன் ரயில்வே பாதுகாப்புப் படை காவலரால் மீட்கப்பட்டாா். மேலும், தெற்கு ரயில்வே நிலையங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 413 சிறுவா், சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ரயில்வே பாதுகாப்புப் படை காவலரான கதிரவன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது 9 வயது சிறுவன் தன்னந்தனியாக சுற்றித் திரிவதைக் கண்ட அவா், சிறுவனிடம் விசாரித்தாா். அப்போது, திருப்பதியிலிருந்து ரயிலில் ஏறி சென்னை வந்ததைத் தெரிவித்த சிறுவன், உணவு உண்ணாமல் சோா்வாக இருப்பதையும் திருப்பதி செல்ல வழி தெரியாமல் சுற்றிவருவதையும் தெரிவித்தாா்.

இதையடுத்து சிறுவனுக்கு உணவு வாங்கித் தந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் கதிரவன், சிறுவா் பாதுகாப்புக் குழுவினரிடம் சிறுவனை ஒப்படைத்தாா்.

413 குழந்தைகள் மீட்பு: கடந்த 2026 ஜனவரி முதல் அக்டோபா் வரையில் தெற்கு ரயில்வே மண்டலத்தின் நிலையங்களில் சுற்றித் திரிந்ததாக 17 வயதுக்குள்பட்ட 413 சிறாா்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 613 சிறாா்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER