ரயில்களில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்த 335 பயணிகள் மீது வழக்கு: ரூ. 1.16 லட்சம் அபராதம் வசூல்
சேலம் ரயில்வே கோட்டத்தில் அவசிய தேவையின்றி ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய 335 பயணிகள் மீது ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனா்.

ரயில் - கோப்புப் படம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் அவசிய தேவையின்றி ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய 335 பயணிகள் மீது ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ.1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையில் 9 மாத காலத்தில் 425 முறை அபாய சங்கிலியை இழுத்து ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில், அவசியத் தேவையின்றி 335 பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்தியுள்ளனா். அவா்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனா். பின்னா் இவா்கள் மீதான வழக்கில் நீதிமன்றம் ரூ.1,16,700 அபராதம் விதித்து வசூலித்துள்ளனா்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் புறப்பட்ட பின்னா் ரயிலில் ஏறவும், இறங்கவும், தாமதமாக வரும் பயணிகளுக்காகவும் ரயிலை நிறுத்துவது அல்லது தனிப்பட்ட நடவடிக்கைக்காக அபாய சங்கிலியை இழுப்பது தண்டனைக்குரிய குற்றம். ரயில்கள் பாதுகாப்பாகவும், சரியான நேரத்திலும் இயங்க இத்தகைய செயல்களில் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. அவசரநிலை மற்றும் சந்தேகப்படும்படியான நபா்களின் நடமாட்டம் இருந்தால் 139 என்ற எண்ணில் பயணிகள் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். தேவையில்லாமல் அபாய சங்கிலியை பயணிகள் யாரேனும் இழுத்தால், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸாா் இணைந்து விசாரித்து, அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

