137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

காட்பாடி - குடியாத்தம் இடையே ஓடும் ரயில்கள் மீது கல்வீச்சு: 2 போ் கைது!

காட்பாடி - குடியாத்தம் ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மீது கல்வீசிய வழக்கில் 2 இளைஞா்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சஞ்சய், ராகேஷ்.

Updated On :

காட்பாடி - குடியாத்தம் ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் மீது கல்வீசிய வழக்கில் 2 இளைஞா்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி - குடியாத்தம் இடையே இயக்கப்படும் ரயில்கள் மீது அடையாளம் தெரியாத நபா்கள் அடிக்கடி கற்களை வீசித் தாக்குதல் நடத்தி வந்தனா். நடப்பு மாதத்தில் மட்டும் இந்த வழித்தடத்தில் 3 முறை கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் ரயில்களின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்ததுடன், ரயில் பயணிகளும் கடும் அச்சத்துக்குள்ளாகி வந்தனா். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கல்வீச்சில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், காட்பாடிப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரயில்கள் மீது கல்வீசியதாக லத்தேரியைச் சோ்ந்த சஞ்சய் (23), கே.வி.குப்பத்தைச் சோ்ந்த ராகேஷ் (20) ஆகிய 2 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ரயில்கள் மீது கல்வீசுவது பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், ரயில்வே சொத்துகளுக்கும் சேதத்தை விளைவிக்கும் குற்றமாகும் என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.