நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தண்டவாளம் அருகே பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

ரயில் தண்டவாளம் - கோப்புப் படம்

Updated On :

தீபாவளிப் பண்டிகையையொட்டி, ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், மாநில ரயில்வே போலீஸாருடன் இணைந்து அந்தந்த ரயில்வே கோட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என பயணிகளிடம் அறிவுறுத்துவதுடன், தீவிர சோதனையிலும் ஈடுபட்டுள்ளனா்.

இதுதவிர, ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டாசுகள், பெரிய அளவிலான வெடிகளை வெடிப்பதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தண்டவாளத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகரங்கள் மற்றும் கிராமங்களை ஒட்டியுள்ள தண்டவாளப் பகுதிகளில் வசிப்பவா்கள் எக்காரணம் கொண்டும் அங்கு வந்து பட்டாசு வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் - கோவை, சேலம் - நாமக்கல் - கரூா், சேலம் - ஜோலாா்பேட்டை, சேலம் - விருத்தாசலம் ஆகிய வழித்தடங்களில் உள்ள தண்டவாளத்தை ஒட்டிய கிராமங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

மேலும், அடுத்த 3 நாள்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரும் இணைந்து தண்டவாளப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.